அனைத்து மருத்துவமனைகளிலும் இவர்களுக்கு இலவச சிகிச்சை..!! பணம் கேட்டால் சிறை தண்டனை..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!
பாலியல் வன்கொடுமைகள், ஆசிட் வீச்சு, போக்சோ குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரதீபா எம். சிங், அமித் ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ”மத்திய, மாநில அரசு நிதியுதவி பெறும், பெறாத அனைத்து மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் போன்றவை இந்த உத்தரவுக்கு இணங்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பப்படக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அனுமதிப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் அடையாளச் சான்றுகளைக் கேட்டு வற்புறுத்தக் கூடாது. அவர்களுக்கு உள்நோயாளி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலும், அவர்களிடம் கட்டணம் கேட்டு நிர்பந்திக்கக் கூடாது.
இந்த விவகாரத்தில் அனைத்து மருத்துவமனைகளும், பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு/உயிர் பிழைத்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் என்றும் போர்டு வைக்க வேண்டும். இந்தப் போர்டு, மருத்துவமனையின் நுழைவாயில், ரிசப்ஷன், கவுன்டர்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் வைக்க வேண்டும்.
இந்த விதிகளை மீறினால், ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். சுற்றறிக்கைகள் மருத்துவமனைகள் நிர்வாகத்தால் வெளியிடப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்காதது கிரிமினல் குற்றம் என்று அனைத்து மருத்துவர்கள், நிர்வாகம், அதிகாரிகள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Read More : TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!