70 வயதை கடந்த முதியவர்களுக்கு இலவச சிகிச்சை..!! குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பு..!!
70 வயதை கடந்த அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் இலவச மருத்துவ சிகிக்சை வழங்கப்படும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி 4-வது நாளான இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்ததற்கும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர், 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் பாராட்டி பேசியிருந்தார்.
அப்போது, மத்திய அரசால் நிறைவேற்றம் செய்யப்பட்டு வரும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் பற்றி பேசினார். அதில், 70 வயதை கடந்த அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் இலவச மருத்துவ சிகிக்சை வழங்கப்படும். இந்த ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை 55 கோடி இந்திய மக்கள் பலனடைந்து உள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் இணைந்து கொண்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும். அதாவது ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் திட்ட பயனாளிகள் மருத்துவ பரிசோதனை, மருத்துவ சிகிச்சைகள் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது. அதன்படி, தற்போது ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த அறிவிப்பை தனது உரையின் மூலம் வெளியிட்டுள்ளார்.
Read More : உதவி கேட்ட காமெடி நடிகர் வெங்கல் ராவ்..!! பணத்தை வாரி வழங்கிய சிம்பு, KPY பாலா..!!