மகிழ்ச்சி...! காவலர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்...! அரசு சார்பில் வழிகாட்டுதல் வெளியீடு...!
மாநகர், புறநகர் பேருந்துகளில் ஏசி தவிர்த்து காவலர்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணிக்க இலவச பயண அட்டை வழங்கப்பட உள்ளது.
தமிழக காவல் துறையில் டிஜிபி தலைமையில் சட்டம் , ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள், டிஎஸ்பி, ஆய்வாளர்கள், காவலர்கள் என, சுமார் 1,21,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களில் 10 சதவீதத்திற்கு மேல் மகளிர் போலீஸார். அரசு பேருந்துகளில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பணி செய்யும் மாவட்டத்திற்குள் தங்களது அடையாள அடடைகளை காண்பித்து இலவச பயணம் மேற்கொள்ளலாம். இதற்காக நவீன அட்டை அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் கீழ்நிலை காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் அரசு பேருந்தில் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்வதற்கான ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஸ்மார்ட் அடையாள அட்டை பெற வேண்டியவர்கள் தொடர்பான தகவலை வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மாநகர், புறநகர் பேருந்துகளில் ஏசி தவிர்த்து காவலர்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணிக்க இலவச பயண அட்டை வழங்கப்படும். இந்த பயண அட்டை குறிப்பிட்ட மாவட்டத்துக்குள்ளாகவும், கால அளவுக்கும் மட்டுமே செல்லுபடியாகும். அட்டையை காண்பிக்க தவறினால் அபராதம் வசூலிக்கலாம், பயண அட்டையை தவறாக பயன்படுத்தினால் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது வாரண்ட் பெற வேண்டும் எனவும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.