For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இலவச பயிற்சி வகுப்பு... விண்ணப்பிக்க நாளை தான் கடைசி...! TRB தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க...!

05:30 AM Nov 29, 2023 IST | 1newsnationuser2
இலவச பயிற்சி வகுப்பு    விண்ணப்பிக்க நாளை தான் கடைசி     trb தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு (http://www.trb.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக 07.12.2023 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தருமபுரியில் 22.11.2023 முதல் நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://tinyurl.com என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். மேலும் தொலைபேசி எண் 04342-296188 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-II-இல் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த நபர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement