For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை இலவச தொலை மருத்துவ ஆலோசனை..! மத்திய அரசின் சூப்பர் திட்டம்...!

Free telemedicine consultation from 10 am to 3 pm
04:57 PM Jun 24, 2024 IST | Vignesh
காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை இலவச தொலை மருத்துவ ஆலோசனை    மத்திய அரசின் சூப்பர் திட்டம்
Advertisement

வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறு, மக்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான இலவச தொலை மருத்துவ ஆலோசனை முறையை இசஞ்ஜீவனி ஓபிடி மூலம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இயக்கி வருகிறது. www.esanjeevaniopd.in என்ற வலைதளம் வாயிலாக, தேசிய ஆன்லைன் வெளி நோயாளி சேவை செயல்படுத்தப்படுகிறது. இதில், வீட்டில் வசதியாக இருந்தவாறு, மருத்துவர்களிடம் சிகிச்சை பெறமுடியும். இதற்கு, கேமரா-மைக் வசதி கொண்ட மடிக்கணினி அல்லது கணினியுடன், வீடியோ அழைப்பு வசதி கொண்ட டாப்லெட் அல்லது கைபேசி தேவை.

Advertisement

ஓடிபி எனப்படும் ஒரு தடவை கடவுச்சொல் வைத்து வலைதளத்தின் வாயிலாக ஆலோசனை பெறலாம். கூகுள் குரோம் அல்லது மொசில்லா பயர்பாக்ஸ் மென்பொருள் மூலம் வலைதளத்தைத் திறக்கலாம். முதலில், இசஞ்ஜீவனி ஓபிடி வலைதளத்தில் பதிவு செய்து, டோக்கன் எண்ணை உருவாக்க வேண்டும். இது தொடர்பான, குறுந்தகவல் வந்ததும், இசஞ்ஜீவனி ஒபிடி வலைதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். அது, இயங்கத் தொடங்கும் வரை காத்திருந்து, கால் நவ் பொத்தானை அழுத்த வேண்டும். இறுதியாக, மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். மின்னனு மருந்துச்சீட்டு அளிக்கப்படும்.

புதிதாக இதைப் பயன்படுத்துபவர்கள் இசஞ்ஜீவனி ஓபிடி வலைதளத்தில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். https://www.esanjeevaniopd.in வலைதளத்துக்கு சென்று, நோயாளியின் பதிவு பொத்தானை அழுத்த வேண்டும். கைபேசி எண்ணை தெரிவித்து, ஒரு தடவை கடவுச்சொல்லுக்கு கிளிக் செய்ய வேண்டும். ஒரு தடவை கடவுச்சொல் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும். இதைப் பயன்படுத்தி, நோயாளி பற்றிய தகவல்களை பூர்த்தி செய்து, டோக்கன் பக்கத்தை உருவாக்க வேண்டும். எக்ஸ்ரே, சோதனைக்கூட ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை ஜேபிஇஜி பிடிஎப் வடிவில் படிவங்களை இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யும் நடைமுறைகள் முடிந்த பின்னர், நோயாளியின் ஐடி டயலாக் பாக்ஸ் மற்றும் டோக்கன் பொத்தானைப் பெற கிளிக் செய்ய வேண்டும். நோயாளியின் ஐடி, டோக்கன் ஆகியவை குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும். இதேபோல, நோயாளியின் முறை நெருங்கும் போது, குறுந்தகவல் மூலம் கூறப்படும். இப்போது மீண்டும் நோயாளியின் ஐடியை லாக்கின் செய்த பின்னர், அவர் மெய்நிகர் ஆலோசனை அறையில், வரிசையில் சேர்க்கப்படுவார். கால் நவ் பொத்தான் இயங்கத்தொடங்கியதும், அதை அழுத்தலாம். அந்தப் பொத்தானை அழுத்திய பத்து வினாடிகளில் மருத்துவரின் முகம் திரையில் தோன்றும்.

ஆலோசனை இவ்வாறு தொடங்கி, முடிவில் மருத்துவர் மின்னணு மருந்துச்சீட்டை தருவார். இதை பதிவிறக்கம் செய்து, அருகில் உள்ள மருந்தகங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில், அனைத்து நாட்களிலும், நோயாளிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆலோசனைகளைப் பெறலாம்.

Tags :
Advertisement