முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”தேர்தல் முடிந்ததும் இலவச வீட்டுமனை பட்டா”..!! சென்னை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழச்சி தங்கபாண்டியன்..!!

10:31 AM Apr 13, 2024 IST | Chella
Advertisement

இலவச வீட்டுமனை பட்டா குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையின் ஒட்டியம்பாக்கம் பகுதி மக்களுக்காகவே, திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் இந்த மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

Advertisement

சென்னையில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு, மக்களை வரவிடாமல் தமிழக அரசு தடுத்துவிட்டதாக தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு, அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் காட்டமாக பதிலளித்திருந்தார். "இது மக்களாட்சி. ஒரு காலமும் அப்படி நடக்காது.. பாஜகவை பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும். முக்கியமாக தென் சென்னை மக்களுக்கு பாஜகவை பற்றி நல்லாவே தெரியும்.

வெள்ளத்தின்போது மக்களுடன் பாஜக நிற்கவில்லை. அதனால் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு மக்களும் செல்லவில்லை. தமிழக அரசு இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் தலையிடுவது கிடையாது. பிரதமர் மோடி இங்கு வந்து சென்றதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. அவர் ரோடு ஷோ பண்ணலாம். ஆனால், ரியல் ஆக்‌ஷன் ஹீரோ எங்கள் முதல்வர் ஸ்டாலின்தான். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தினமும் எதையாவது ஒரு கற்பனை கதையை பேசிவருகிறார். சென்னை வெள்ளத்தின்போது தென் சென்னை மக்களுக்கு உணவளிக்கப்படவில்லை என்று சொல்கிறார்.

ஆனால், சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, பள்ளிகள், சமுதாய நலக்கூடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். ஜேசிபியில் சென்று மக்களுக்கு தண்ணீர், பால் பாக்கெட்டுகள் தரப்பட்டது. குற்றச்சாட்டு சொல்றதுக்கு எதுவுமே இல்லாவிட்டால், கதை கட்டுவதுதான் ஜெயவர்தனின் வழக்கம்" என்றார் தமிழச்சி தங்கபாண்டியன். இதற்கு பிறகு, தென் சென்னை மக்களவை தொகுதிக்குள்பட்ட பெரும்பாக்கம் முதல்நிலை ஊராட்சி பகுதியில் தொடங்கி மேட்டுத்தெரு, காந்தி தெரு, பாரதி வித்யாலயா பள்ளி, நேதாஜி தெரு, ஒட்டியம் பாக்கம், சித்தாலாம்பாக்கம் ஆகிய பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் ஓட்டு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஒட்டியம்பாக்கம் பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாகவே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வேண்டுகோள்களை விடுத்து வருகின்றனர். இது தொடா்பாக முதல்வா் ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், ஒட்டியம்பாக்கம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான முதல்கட்ட பேச்சுவாா்த்தையம் நடந்து முடிந்துள்ளது. அதனால், இந்த தோ்தல் முடிந்ததுமே, இந்தப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். திமுக ஆட்சியில்தான் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது" என்றாா்.

Read More : ”இதை யார் செய்திருக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டு போடுங்கள்”..!! உதயநிதி ஸ்டாலின் தடாலடி..!!

Advertisement
Next Article