For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இலவச கல்வி... கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை...

06:45 AM Jun 03, 2024 IST | Vignesh
இலவச கல்வி    கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது  அரசு நடவடிக்கை
Advertisement

கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், அவர்களிடம் முழுமையான கல்விக்கட்டணத்தைக் கேட்டு பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் நிலையில், பெற்றோரிடம் தனியாக கட்டணம் வசூலிக்க தணியார் பள்ளிகள் முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி 2020&-21ஆம் கல்வியாண்டில் மழலையர் மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,458, 2ஆம் வகுப்புக்கு ரூ.12,499, 3ஆம் வகுப்புக்கு ரூ.12,578, 4ஆம் வகுப்புக்கு ரூ.12,584, 5ஆம் வகுப்புக்கு ரூ.12,831, 6ஆம் வகுப்புக்கு ரூ.17,077, 7ஆம் வகுப்புக்கு ரூ.17,106, 8ஆம் வகுப்புக்கு ரூ.17,027 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 2021&22 முதல் 2025&26 வரையிலான காலத்திற்கு மழலையர் வகுப்புகளுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.6000 ஆக குறைக்கப்பட்டு விட்டது.1 முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ரூ.12,659, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.16,477 என்ற அளவுக்கு குறைத்து கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இழப்பை ஈடு செய்யவே கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கல்வி உரிமைச் சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சேர்ந்து பயில்வதையும், அவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளுக்கு வழங்கப் பட்டு வந்த கட்டணம் குறைக்கப்பட்டதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்களை அரசு அழைத்து பேசி, இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் எந்த மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் ‌

Tags :
Advertisement