For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொதுச் சட்ட நுழைவு தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு...! ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு...!

09:28 AM Jan 09, 2024 IST | 1newsnationuser2
பொதுச் சட்ட நுழைவு தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு     ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு
Advertisement

அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொதுச் சட்ட நுழைவு தேர்விற்கான பயிற்சி (Common law admission test) இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனைத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொதுச் சட்ட நுழைவு தேர்விற்கான பயிற்சி (Common law admission test) இலவசமாக வழங்கப்படவுள்ளது.

Advertisement

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த 18 முதல் 25 வயது நிரம்பிய 12-ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும் நேரிடையாகவும் நடைபெறும்.

மேலும், இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொதுச் சட்ட நுழைவு தேர்விற்கான பயிற்சி (Common law admission test) வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான, நேர்காணல் (Interview), குழு விவாதம் (Group Discussion), எழுத்து தோ்வு (Written ability test) ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

மேற்கண்ட தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement