சூப்பர் சானஸ்..! திங்கள் முதல் வெள்ளி வரை... TNPSC குரூப்-4 தேர்வுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு...!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மாவட்ட, கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 10-01-2025 முதல் துவங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட நாளில் சென்னை 32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக ஏதாவது ஒரு வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும், விவரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.