பிளிப்கார்ட்டில் மோசடியா..? சூட்கேஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் வெவ்வேறு விலை..!!
ஒரு கடைக்கு நேரில் சென்று ஷாப்பிங் செய்வதற்கும், ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. சௌகரியம் மற்றும் பல்வேறு ஆப்ஷன்கள் காரணமாக பலர் தற்போது ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புகின்றனர். வீட்டில் இருந்தபடியே எந்த நேரத்திலும் நமக்கு பிடித்தமான பொருட்களை ஆர்டர் செய்து கொள்ள முடியும்.
இதனால், நம்முடைய நேரம் மற்றும் முயற்சி மிச்சமாகிறது. இதில் பல்வேறு பலன்கள் இருந்தாலும் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடுபவர்கள் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது தற்போது அவசியமாகிறது. சைபர் கிரிமினல்கள் அடிக்கடி இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்களை டார்கெட் செய்து தனிநபர்களின் தனிப்பட்ட மற்றும் பொருளாதார சம்பந்தப்பட்ட தகவல்களை திருடுகின்றனர்.
இந்நிலையில் தான், கேஷவ் என்பவர் மொகோபரா சூட்கேஸ் ஒன்றை வாங்க ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் இருந்து பிளிப்கார்டில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது அதன் விலை ஆண்ட்ராய்டு போனில் ரூ.4,119 என்றும் ஆப்பிள் போனில் ரூ.4,799 என்றும் காட்டியுள்ளது. இது ஏன் என்று அவர் கேட்க, பல காரணிகள் அடிப்படையில் விற்பனையாளர் இப்படி விலையை நிர்ணயிப்பதாக ஃபிளிப்கார்ட் விளக்கம் அளித்துள்ளது.
Read More : பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் ரூ.40,000..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!