தட்டி தூக்கிய காவல்துறை...! கட்டட டெண்டர்கள் விடுவதில், அரசின் பணம் மோசடி...! முக்கிய புள்ளி கைது...!
போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், மாநகர போலீசாரால் கைது
கடந்த மாதம் நவம்பர் 6 ஆம் தேதி, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், அரசு சாரா தனியார் நிறுவனமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை உடன் இணைந்து கல்வித் திட்டங்களை மேற்கொள்வதற்கான அட்டவணை நிகழ்ச்சி நிரலை சிண்டிகேட் கூட்டத்தில் வைத்தது.
நிறுவனத்தின் முகவரி பெரியார் பல்கலைக்கழகம் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. இந்நிறுவனத்தில் துணைவேந்தர் ஆர். ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் உட்பட நான்கு இயக்குநர்கள் உள்ளனர். இதில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் `PUTER Foundation' என்கிற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் பல தனியார் அமைப்புகளை இணைத்துக்கொண்டு, கட்டட டெண்டர்கள் விடுவதில், அரசின் பணத்தை மோசடி செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்கள் எழுந்தன.
இதற்கிடையில், மதியம், சேலம் நகர போலீஸார், பெரியார் பல்கலைக் கழகத்துக்கு வந்து, புகார்கள் குறித்து, துணைவேந்தரிடம் விசாரித்து, அவரை கைது செய்து, அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு நிதி முறைகேடு புகார்களை பல்கலைக்கழகம் எதிர்கொண்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்று பெரியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல், மாநில அரசு அமைத்த குழுவும் முறைகேடுகள் குறித்து விசாரித்தது.