முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இளம் பெண்களை கர்ப்பமாக்கினால், 20 லட்ச ரூபாய் பரிசாம்... ஆண்களே ஜாக்கிரதை!!!

fraud-gang-fooled-men-for-money
05:39 PM Nov 14, 2024 IST | Saranya
Advertisement

சமூக வலைதளங்களில் எத்தனை நல்ல விஷயங்கள் பரவுகிறதோ அதை விட வேகமாக கேடான விஷயங்கள் பரவி விடும். அந்த வகையில், பேஸ்புக்கில் தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இளம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டுகின்றனர். மேலும், குழந்தைபேர் இல்லாத இந்த பெண்களை மூன்று மாதங்களுக்குள் கர்ப்பமாக்கினால் 20 லட்சம் ரூபாய் வரை ரொக்க பரிசு கிடைக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது. பலருக்கு இது வெறும் பொய் என்று தெரிந்தாலும், வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் ஆண்கள், பண ஆசையில் அந்த வீடியோவில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு பேசிவிடுகின்றனர்.

Advertisement

அப்போது, எதிர் திசையில் பேசுபவர், எங்களது கார் டிரைவர் உங்களை ஹோட்டலுக்கு அழைத்து சொல்வார். நீங்கள் அங்கு இருக்கும் மேடமை பார்த்து உடலுறவு கொள்ள வேண்டும். இதனால் அவர் கர்ப்பம் தரித்தால், 20 லட்ச ரூபாய் பணம் கிடைக்கும். அப்படி நீங்கள் உடலுறவு கொண்டு அவர் கர்ப்பம் தரிக்க முடியாவிட்டாலும், உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என ஆசை வார்த்தைகளை பேசுகின்றனர். மோசடிக்காரர்களின் வார்த்தையை நம்பும் சிலர், இந்த வேலைக்கு சம்மதம் தெரிவித்தால், வேலைக்கான அடையாள அட்டைக்கு 999 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

பண ஆசையில் இவர்கள் கட்டணத்தை செலுத்திய பின், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பல காரணங்களை சொல்லி, ஒரு லட்சம் ரூபாய் வரை பணத்தை ஏமாற்றி வாங்கிவிடுகின்றனர். இது போன்ற மோசடி, குறிப்பாக ஹரியானா, மத்திய பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வேலை இல்லாத வாலிபர்களை குறி வைத்து நடைபெறுகிறது. அந்த வகையில், ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடம், இந்த கும்பல் ஒரு லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றி வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல், மத்திய பிரதேசத்தை சேர்ந்த டிரைவரும் பணத்தை இழந்துள்ளார். இதனால், பேஸ்புக்கில் 9 வகையான கணக்குகளை வைத்திருக்கும் இந்த மோசடி கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்.

Read more: கடித்து குதறிய தெரு நாய்கள்.. துடிதுடித்து உயிரிழந்த 14 மாத குழந்தை…

Tags :
fraud gangmoneyyounsters
Advertisement
Next Article