முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை...! காங்கிரஸ் பாஜக எத்தனை மாநிலத்தில் முன்னிலை...?

10:42 AM Dec 03, 2023 IST | 1newsnationuser2
Advertisement

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Advertisement

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு படிப்படியாக முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது.

அதன்படி, தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திசேகர் ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். இதில் கஜ்வெல் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் எட்டலா ராஜேந்தர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டி இட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க.

Tags :
BJPCONGRESSrajasthanTelengana
Advertisement
Next Article