யூடியூப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி புற்று நோயால் மரணம்..!!
யூடியூப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த, சூசன் வோஜ்சிக்கி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வோஜ்சிக்கியின் மரணம் குறித்த செய்தியை அவரது கணவர் டென்னிஸ் ட்ரோப்பர் சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் ஒரு பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். ஆகஸ்ட் 10, 2024 அன்று வெளியிட்டுள்ள பதிவில், வோஜ்சிக்கி புற்றுநோயால் இறந்துவிட்டதாக ட்ரோப்பர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சூசன் எனது சிறந்த நண்பர் மற்றும் வாழ்க்கை துணை மட்டுமல்ல, ஒரு சிறந்த மனம், அன்பான தாய் மற்றும் பலருக்கு அன்பான தோழியாக இருந்தார். எங்கள் குடும்பம் மற்றும் உலகத்தில் அவரது தாக்கம் அளவிட முடியாதது. நாங்கள் மனம் உடைந்துள்ளோம், ஆனால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் செல்லும்போது தயவுசெய்து எங்கள் குடும்பத்தை உங்கள் எண்ணங்களில் வைத்திருங்கள்” என்று டென்னிஸ் ட்ரோப்பர் குறிப்பிட்டுள்ளார்.
வோஜ்சிக்கி குடும்பத்தினருக்கு சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், கூகுளின் வரலாற்றில் பலரைப் போலவே வோஜ்சிக்கி முக்கிய இடம் வகிக்கிறார். அவர் இல்லாத உலகத்தை கற்பனை செய்வது கடினம். அவர் ஒரு நம்பமுடியாத நபர், தலைவர் மற்றும் நண்பராக இருந்தார். உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவளை அறிந்துகொள்வதில் சிறந்து விளங்கும் எண்ணற்ற கூகுளர்களில் நானும் ஒருவன்” என சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
Read more ; “அசைவ ராமாயணத்தை, சைவ ராமாயணமாக மாற்றியவர் கம்பன்..!!” – அமைச்சர் பேச்சால் சர்ச்சை