ACCIDENT| மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்.!! பரபரப்பு தகவல்.!
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான லஹிரு திரிமான்னே கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று அவர் சென்ற கார் அனுராதபுரம் திரப்பனே பகுதியில் விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லஹிரு திரிமான்னே சென்ற கார் திரப்பனே என்ற இடத்தில் வைத்து லாரியுடன் மோதியதாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது. நியூஸ்வைர் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே சிறு காயங்களுடன் உயிர்த்தப்பியதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் லெஜண்ட் கிரிக்கெட் டிராபியில் நியூயார்க் சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக திரிமன்னே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. சுப்பர் ஸ்டார் ஸ்டிரைக்கர்ஸ், திரிமன்னே பாதுகாப்பாக இருப்பதாகவும், அப்பகுதியில் உள்ள கோவிலுக்குச் சென்றபோது விபத்துக்குள்ளானதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது
இது தொடர்பாக நியூயார்க் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "லஹிரு திரிமான்னே மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு சென்ற போது சிறிய கார் விபத்தில் சிக்கியுள்ளனர். தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். சிறிய காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது ".
"அதிர்ஷ்டவசமாக முழுமையான சிகிச்சைக்கு பின் அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியப்படுத்துகிறோம். தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் நல்ல உடல் நலமுடன் உள்ளனர். எந்தவித கவலையும் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் உடனிருந்து தங்களது பிரார்த்தனைகளையும் அன்பையும் வழங்கிய அனைவருக்கும் மனதாரப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் குணமடைந்து வரும் வரை அவர்களது பிரைவசிக்கு மதிப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை அணிக்காக விளையாடிய லகிரு திரிமான்னே கடந்த வருடம் ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 2,088 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதில் 10 சதங்களும் 10 அரை சதங்களும் அடங்கும். மேலும் 127 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இவர் 4 சதங்கள் மற்றும் 21 அரை சதங்களுடன் 3194 ரன்களை குவித்திருக்கிறார்.