பெண் ஐபிஎஸ்-க்கு பாலியல் தொல்லை.! முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு சிறை தண்டனை.! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி.!
தமிழகத்தின் முன்னாள் சிறப்பு டிஜிபியாக பதவி வகித்தவர் ராஜேஷ் தாஸ். இவர் பணியில் இருந்த போது தன்னுடன் பணியாற்றிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 20,500 ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் ராஜேஷ் தாஸ்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு முன்னாள் டிஜிபி பலமுறை ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி ஒன்றாம் தேதி ஆஜராகவில்லை என்றால் அவரது வழக்கு ரத்து செய்யப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி ஒன்றாம் தேதி ஆஜரான ராஜேஷ் தாஸ் தனது தரப்பு நியாயங்களை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதி பூர்ணிமா ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தார். பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் டிஜிபிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.