For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது..' பீலா வெங்கடேசன் புகாரில் போலீசார் அதிரடி!

01:10 PM May 24, 2024 IST | Mari Thangam
 முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது    பீலா வெங்கடேசன் புகாரில் போலீசார் அதிரடி
Advertisement

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். பீலா ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

முன்னாள் டிஜிபியான ராஜேஷ் தாசின் பண்ணை வீடு கேளம்பாக்கம் அருகே தையூரில் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. நீச்சல் குளத்துடன் அமைந்துள்ள பண்ணை வீட்டில்தான் ராஜேஷ் தாஸ் எப்போதும் தங்குவது வழக்கம். இந்த வீடு மற்றும் நிலம் ஆகியவை ராஜேஷ் தாஸ் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேசன் பெயரில் வாங்கப்பட்டுள்ளது.

மேலும், 2 பேரின் பெயரில் வங்கிக்கடனும் பெறப்பட்டுள்ளது. இதனிடையே, ராஜேஷ் தாஸ் பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்தார். இதுதொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தண்டனை உறுதி செய்தது.

இதனையடுத்து ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட் கைதுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆன்லைன் மூலம் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பினார். தனது முன்னாள் கணவர் ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்து மீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்துவிட்டு உள்ளே தங்கி இருப்பதாகவும், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார், கொலை மிரட்டல், சட்ட விரோதமாக கூடுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ராஜேஷ்தாஸ் மற்றும் 10 பேரின் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, இன்று காலை பனையூரில் உள்ள வீட்டில் வைத்து ராஜேஷ் தாஸை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஸ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘கிழக்கு ஆசியா பகுதியில் போர் பதற்றம்’ தைவான் மீது சீனா திடீர் ராணுவ ஒத்திகை நடத்துவது ஏன்?

Advertisement