For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Rolls Royce நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

The murder of Ian Cameron, the former chief designer of Rolls-Royce, has caused a shock.
06:15 PM Jul 16, 2024 IST | Chella
rolls royce நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை     வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் இயான் கேமரூன் (74), ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார். குற்றாவளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலையாளியைப் பிடிக்க இயன் கேமரூனின் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் விண்டேஜ் கார் நிபுணராக இருந்த இவர் தனது மனைவியுடன் அங்கு வசித்து வந்துள்ளார். கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் 180 செ.மீ முதல் 190 செ.மீ வரை உயரம் கொண்டவர். வெளிர் கால்சட்டை, மஞ்சள்-பச்சை கையுறை அணிந்து இருந்தார் என்று தி சன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. BMW 3 Series, Z8 மற்றும் Phantom, Ghost போன்ற ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களின் உருவாக்கத்தில் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : கிரெடிட் கார்டில் இந்த விஷயத்தை செய்து சிக்கலில் மாட்டிக்காதீங்க..!! கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement