For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது..!! பிரதமர் மோடி அறிவிப்பு..!!

02:24 PM Feb 09, 2024 IST | 1newsnationuser6
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது     பிரதமர் மோடி அறிவிப்பு
Advertisement

முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வழக்கமாக ஓராண்டில் 3 பாரத ரத்னா விருதுகள் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் ஆகியோருக்கு பாரரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

சரண் சிங் கடந்த 1902ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் பிறந்தவர். அவர் 1937இல் சப்ரௌலியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946, 1952, 1962 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். 1967ஆம் ஆண்டிலும், 1970ஆம் ஆண்டிலும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக சரண் சிங் இருந்தார். 1979 ஜூலை 28 முதல் 1980 ஜனவரி 14 வரை பிரதமராக இருந்தார்.

நரசிம்ம ராவ், 1921ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கரீம் நகரில் பிறந்தவர். ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். விவசாயி, வழக்கறிஞர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகிய பல பரிமாணங்களை கொண்டவர். கடந்த 1991 ஜூன் 21 முதல் 1996 மே 16 வரை பிரதமராக இருந்தார்.

கும்பகோணத்தில் 1925ஆம் ஆண்டில் பிறந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர். திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் விலங்கியலில் பி.எஸ்சி., பட்டமும், கோவை வேளாண் கல்லூரியில் வேளாண் அறிவியல் பட்டமும் பெற்றவர். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐஏஆர்ஐ) வேளாண் அறிவியலில் மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கத்தில் நிபுணத்துவம் பிரிவில் எம்.எஸ்சி., பட்டமும், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

Tags :
Advertisement