நீலகிரி தொகுதி முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மதன் காலமானார்...!
மூத்த அரசியல் தலைவரும், நீலகிரி தொகுதி முன்னாள் பாஜக எம்.பியுமான மாஸ்டர் மதன் வயது மூப்பு காரணமாக காலமானார்.
மாஸ்டர் மாதன், நீலகிரி தொகுதி எம்.பி.,யாக கடந்த, 1998, 1999 ஆண்டுகளில் பதவி வகித்தவர். தற்போது, 93 வயதான இவர் பிரஸ் காலனி, பாலாஜி கார்டனில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். உடல் நலம் குன்றிய நிலையில், சிகிச்சை பெற்று வந்த மாஸ்டர் மாதனை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்து, நலம் விசாரித்தார். இந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
1998-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட மதன்.எம்.(என்கின்ற) மாஸ்டர் மதன் எம். 3,22,818 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 46.49 சதவீதமாகும். பின்னர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட மதன்.எம்.(என்கின்ற) மாஸ்டர் மதன் எம். 3,69,828 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 50.73 சதவீதமாகும். மறைந்த முன்னாள் முதல்வர் வாஜ்பாய் அவர்களின் நம்பிக்கை கூறிய நபராகவும் இவர் திகழ்ந்தார். அவரது மறைவு பாஜகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.