For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சோகம்..! கோவையின் திமுக முக்கிய தலைவர் காலமானார்... உடைந்து போன முதல்வர் ஸ்டாலின்...!

Former legislator K. Selvaraj died of a heart attack on Friday. Chief Minister Stalin condoled his demise.
05:28 AM Nov 09, 2024 IST | Vignesh
சோகம்    கோவையின் திமுக முக்கிய தலைவர் காலமானார்    உடைந்து போன முதல்வர் ஸ்டாலின்
Advertisement

கோவையைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.செல்வராஜ் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கே.செல்வராஜ். முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆவார். தற்போது திமுகவில் செய்தி தொடர்பு துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி கலாமணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் வெங்கட்ராம் திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றது. இதனிடையே திருமண நிகழ்வுகளை முடித்துவிட்டு, இரு வீட்டார் கார் மூலம் நேற்று கோவைக்கு புறப்பட்டனர். மலையில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது செல்வராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் காலமானார். அவரது மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்சியின் கொள்கைகளை, கருத்துகளை விவாதங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் ஆணித்தரமாக எடுத்து வைத்தவர்.

சமீபத்தில் நான் கோவை சென்றிருந்த போது, அங்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் என்னைச் சந்தித்து, ‘நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது’ என்று நெஞ்சாரப் பாராட்டிவிட்டு, ‘மகனின் திருமணத்தை வைத்திருக்கிறேன். திருமணம் முடிந்து மணமக்களுடன் வந்து தங்களிடம் சென்னையில் வாழ்த்து பெறுகிறேன்’ என்றார். ஆனால் இன்று மகனின் திருமணம் நடந்தேறி வந்து கொண்டிருந்தபோதே, அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி, என்னை ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. கோவை செல்வராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement