ஷாக் நியூஸ்...! இந்திய அணி முன்னாள் வீரர் கெய்க்வாட் காலமானார்...!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் தனது 71வது வயதில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார்.
இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெய்க்வாட், கடந்த மாதம் இந்தியா திரும்புவதற்கு முன்பு, லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கெய்க்வாட்டின் சிகிச்சைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 1 கோடி ரூபாயை வழங்கியது. 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.
கெய்க்வாட்டின் 22 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 205 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார், பின்னர் அவர் இந்திய தேசிய அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார், குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று கொடுத்தார். அவரது பயிற்சியின் கீழ், இந்திய அணி 2000 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அவரது இந்த மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.