முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!
மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா (வயது 80) கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். இவர், கடந்தாண்டு உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால், சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று எடுத்து வீடு திரும்பினார்.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல், வீட்டிலேயே இருந்தார். தற்போது வயது மூப்பு காரணமாக அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புத்ததேவ் பட்டாச்சார்யா 2000 - 2011 வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார்.
Read More : ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்..!! தமிழ்நாடு அரசு அனுமதி..!!