For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலையிலே சோகம்...! முதல்வருக்கு நெருக்கமான நபர் காலமானார்...! உடைந்து போன CM ஸ்டாலின்...

Former Chennai Corporation Health Officer, Guganandham passed away due to ill health.
05:26 AM Jun 25, 2024 IST | Vignesh
காலையிலே சோகம்     முதல்வருக்கு நெருக்கமான நபர் காலமானார்     உடைந்து போன cm ஸ்டாலின்
Advertisement

சென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார அலுவலர், குகானந்தம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது முதல்வர் தனது இரங்கல் செய்தியில்; பெருநகர சென்னை மாநகராட்சியின் மாநகர நல அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் சிறந்த மருத்துவச் சேவையாற்றியவருமான மருத்துவர் பெ. குகானந்தம் அவர்கள் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மருத்துவம் என்பது மிக உன்னதமான மனிதம் போற்றும் துறை என்பதற்கான சான்றாக தம் வாழ்நாள் முழுவதும், அத்துறையில் அளப்பரிய சேவைகளை ஆற்றி வந்தவர் மருத்துவர் குகானந்தம் அவர்கள்.

சென்னை நகரின் மேயராக நான் இருந்த காலத்தில், சென்னை மாநகரச் சுகாதார அலுவலராகப் பணியாற்றிய மருத்துவர் குகானந்தம் அவர்கள், மாநகர மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளையும், களப்பணிகளையும் எனக்கு உறுதுணையாக இருந்து ஆற்றியவர். அரசுப் பள்ளியில் படித்து மருத்துவராக உயர்ந்த எளிய பின்புலத்தைக் கொண்டவர் என்பதால், தம் வாழ்நாள் முழுக்க எளிய மக்களின் நலவாழ்வில் அக்கறை கொண்டவராகவும், அவர்களுக்காக பாடுபடுவதில் ஆர்வம் கொண்டவராகவும் அவர் திகழ்ந்தார்.

சென்னை மீதும், அந்த மண்ணின் எளிய மக்கள் மீதும் அளப்பரிய நேசத்தைப் பொழிந்த மருத்துவர் குகானந்தம் அவர்கள், சென்னை சுகாதாரமான நகரமாகவும், சுகவாழ்வுக்கான வசிப்பிடமாகவும் திகழ வேண்டும் என்பதில் தீராத வேட்கை கொண்டவராகத் திகழ்ந்தார். குறிப்பாக, குடிசைவாழ் மக்களின் நலவாழ்வில் எப்போதுமே தனி அக்கறை கொண்டவராகச் செயல்பட்டு வந்தார். அதற்கேற்ப, பெருநகர சென்னை மாநகராட்சியில் உதவி சுகாதார அலுவலராக பணியாற்றிய போது, எளிய மக்களின் நலவாழ்வுக்காக அயராது பாடுபட்ட மருத்துவர் குகானந்தம் அவர்கள், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமணை இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில், அந்த மருத்துவமனையின் கட்டமைப்பையும், தரத்தையும் மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, ஏழை, எளிய மக்களின் உயிர்காக்கும் மையமாக அதனை மாற்றினார்.

1992, 1993 காலக்கட்டத்தில் சென்னையில் காலரா நோய் பரவிய போது, எளிய மக்களை அந்நோயில் இருந்து காப்பாற்றுவதற்கான செயல்திட்டங்களுடன், சிறப்பான களப்பணியை ஆற்றியவர். அதனைத் தொடர்ந்து மாநகர நல அலுவலராகவும் சிறந்த மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகளை வழங்கிப் பணியாற்றி 2014-ஆம் ஆண்டு ஒய்வு பெற்றுள்ளார். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தமது மருத்துவத் தொண்டில் இருந்து அவர் ஒருபோதும் ஓய்வு பெறவில்லை. கொரோனா காலத்தில் அரசு அமைத்த சிறப்பு ஆய்வுக்குழுவில் பங்கேற்ற அவர், காலரா, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்த் தடுப்பில் தமக்கிருந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, மக்களை அப்பேரிடரில் இருந்து மீட்கப் பேருதவியாக இருந்தார்.

இத்தனை சிறப்பு வாய்ந்த இணையற்ற மனிதநேய மருத்துவரான மருத்துவர் குகானந்தம் அவர்களின் மறைவினால் வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர், உறவினர்கள், மருத்துவத்துறை சார்ந்த சக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement