BREAKING: பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது.! பிரதமர் மோடி அறிவிப்பு.!
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமூக நீதிப் போராளியுமான ஜன் நாயக் கர்பூரி தாக்கூருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க இருப்பதாக பிரதமர் மோடி தனது 'X' வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வருடம் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இந்த கௌரவத்தை வழங்குவதில் தேசம் பெருமைப்படுகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைக்காக போராடிய கஸ்தூரி தாக்கூர் ஜனங்களின் நாயகன் என்ற அடைமொழியால் அன்புடன் அழைக்கப்பட்டவர். இவர் இரண்டு முறை பீகார் மாநில முதல்வராகவும் பதவி வகித்தார். பீகார் மாநிலத்தின் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது பாடத்திட்டங்களில் இருந்து ஆங்கில மொழியை நீக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய கௌரவிக்கப்பட இருக்கிறது.
இந்த அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளியிட்டு இருக்கும் பிரதமர் மோடி " தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் கலங்கரை விளக்கமான ஜன் நாயக் கர்பூரி தாக்கூர் அவர்களுக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கி கௌரவிப்பதில் இந்தியா பெருமை படுகிறது. அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட இருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்". மக்கள் போராளியும் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் சாம்பியனாக அவர் விளங்கினார் என்பதற்கு இந்த விருது ஒரு சான்றாக அமைகிறது.
தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதற்கான அவரது போராட்டங்கள் அர்ப்பணிப்புகள் மற்றும் தலைமைத்துவம் ஆகியவை இந்தியாவின் அரசியல் கட்டமைப்பில் அழக்க முடியாத முத்திரையாக பதிந்திருக்கிறது. அவருக்கு இந்த விருதை வழங்கி கௌரவிப்பதன் மூலம் சமத்துவமான சமுதாயத்தை அமைக்கும் அவரது பணியை நாம் தொடர ஊக்குவிக்கும் என தெரிவித்து இருக்கிறார்.