முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'அடுத்த 20 நாட்களுக்குள் புதிதாக 4 மாநகராட்சிகள்’..!! சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு..!!

It has been announced in the Legislative Assembly that 4 new Municipal Corporations will be created in Tamil Nadu within the next 20 days.
04:30 PM Jun 22, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 20 நாட்களுக்குள் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள் தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகையின் சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், சட்டப்பேரவையில் ஒரு முக்கிய அறிவிப்பை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் அடுத்த 20 நாட்களுக்குள் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். தற்போது 490ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700ஆக உயர்த்தப்படும் என்றும் 21 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நகராட்சிகளின் எண்ணிக்கையும் 139இல் இருந்து 159ஆக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

Read More : ’இதுதான் ஆய்வு நடத்திய லட்சணமா’..? ’அமைச்சரை உடனே பதவி நீக்கம் செய்க..!! முதல்வருக்கு கேள்வி எழுப்பிய அண்ணாமலை..!!

Tags :
அமைச்சர் கே.என்.நேருசட்டப்பேரவைதமிழ்நாடுமாநகராட்சிகள்
Advertisement
Next Article