முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செல்போனை எங்கு வைத்தோம் என மறந்துவிட்டீர்களா? கைத்தட்டினா போதும்!! உடனே கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?

We suddenly forget where we put our cell phone somewhere.. Just clap your hands. See how in this post
06:02 PM Jun 18, 2024 IST | Mari Thangam
Advertisement

நம் செல்போனை திடீரென எங்காவது வைத்துவிட்டு எங்கு வைத்தோம் என்பதை மறந்துவிடுவோம். இதற்காக நாம் பொதுவாக பயன்படுத்து உத்திதான் வேறொரு செல்போனில் இருந்து அழைப்பது. இனி கைதட்டினால் போதும். எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

முதலில் Playstore app-ல் Clap to find என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த செயலியை திறந்து இதில் Clap to start என்று காட்டும். அதில் 3 முறை உங்கள் கைகளை தட்டி சத்தம் கொடுக்க வேண்டும். பின் அதில் ஓக்கே என்ற ஆப்ஷன் இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவுதான் இந்த எளிமையான முறையை பின்பற்றினாலே உங்கள் செல்போனை நீங்கள் எங்கு மறந்து வைத்தாலும் கைதட்டி கண்டுபிடிக்க முடியும். இந்த செயலியில் உள்ள செட்டிங்ஸ் உள்ளே சென்று அதில் Sound, vibrate, Flash என்ற மூன்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.

எந்த ஆப்ஷன் வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அல்லது 3 ஆப்ஷன் வேண்டும் என்றாலும் நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த செயலியில் அலர்ட் செட்டிங் என்ற ஆப்ஷன் இருக்கும். அதில்,உங்களுக்கு என்ன ரிங்டோன் வேண்டுமோ அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்த ஸ்டெப், கடைசி ஸ்டெப் அதற்கு கீழே Sensitive என்ற ஆப்ஷன்இருக்கும் அதில் வால்யூம்-ஐ குறைத்து வைத்துக் கொள்ளவும். ஏனெனில் ஏதாவது சிறிய சத்தம் கேட்டால் கூட போன் சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கும். இதை தவிர்க்க Sensitive வால்யூம்-ஐ குறைக்க வேண்டும்.

Read more ; “அன்புள்ள அப்பா.. அப்பா!!” இறந்துபோன இராணுவ வீரருக்கு மெசெஜ் அனுப்பும் 7 வயது மகன்..!!

Tags :
Cell PhoneClap to findhand claptrending
Advertisement
Next Article