For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் இருக்கும் காடுகள் மற்றும் அதன் வகைகள்.!ஒரு பார்வை.!!

05:43 AM Dec 27, 2023 IST | 1newsnationuser4
தமிழகத்தில் இருக்கும் காடுகள் மற்றும் அதன் வகைகள்  ஒரு பார்வை
Advertisement

நமது தமிழ்நாடு பல இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு பகுதியாகும். இங்கு ஏராளமான காடுகள் அருவிகள், ஆறுகள், நீர்நிலைகள் மற்றும் மலைப்பிரதேசங்களும் நிறைந்து இருக்கின்றன. நமது தமிழ்நாட்டில் 22877 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு காடுகளை கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் காடுகள் வெப்ப மண்டல பசுமை மாறா காடுகள், வெப்ப மண்டல அகன்ற இலை காடுகள், முட்புதர் காடுகள்,
சதுப்புநிலக் காடுகள்,
மலையகக் காடுகள் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

வெப்ப மண்டல பசுமை மாறா காடுகள் ஆண்டு முழுவதும் செழிப்பான பசுமை நிறைகளை கொண்டிருக்கின்றன. இந்தக் காடுகளில் ஆண்டுக்கு 200cm மழை பொழிவை பெறுகிறது. மேலும் இங்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது. இந்த வகை காடுகளில் எபோணி, தேக்கு, கருங்காலி மற்றும் செம்மரம் போன்ற மர வகைகள் வளருகின்றன. இந்த வகை காடுகள் ஆனைமலை நீலகிரி மற்றும் கடலோரப் பகுதிகளில் அமைந்திருக்கிறது. வெப்ப மண்டல அகன்ற இலை காடுகள் ஆண்டிற்கு நூறு முதல் 200 cm மழையை பெறுகின்றன. இவை வெப்ப காலங்களில் நீராவி போக்கை தடுப்பதற்காக இலைகளை உதிர்த்து விடுகின்றன. இந்த வகை காடுகளில் சால், சந்தனம், தேக்கு, மூங்கில், படாக் போன்ற சில வகை மரங்கள் காணப்படுகிறது. இவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கின்றன.

வறண்ட வெப்பநிலையும் குறைவான மழை பொழிவும் உள்ள இடங்களில் முப்புதற்காடுகள் காணப்படுகின்றன. இந்த வகை காடுகளில் வறண்ட நில தாவரங்களான பனைமரம் கள்ளி மற்றும் முட்புதர்கள் நிறைந்து இருக்கிறது. இவை ஆழமான வேர்களையும் கடினமான இலைகளையும் கொண்டு இருக்கின்றன. வெப்பமண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் உப்பு நீர் அதிகம் கொண்ட பகுதிகளில் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன. இந்த வகை காடுகள் மாங்குரோவ் காடுகள் என அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பிச்சாவரம் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலக்காடுகள் 1214 ஹெக்டேர் பரப்பில் அமைந்திருக்கிறது. இது மிகச் சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. மேலும் கொடிய கரையிலும் 17 சதுர கிலோமீட்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகள் அமைந்திருக்கின்றன. மழை பொழிவு அதிகமாக இருக்கும் மலைச்சரிவுகளில் மலையகக் காடுகள் அமைந்திருக்கின்றன. இந்த வகை காடுகளில் சிறிய புதர் செடிகளில் இருந்து பெரிய மரங்கள் மற்றும் கொடிகள் நிறைந்து இருக்கிறது. இவை தமிழ்நாட்டின் ஆனைமலை மற்றும் நீலகிரி பகுதிகளில் அமைந்திருக்கின்றன.

Tags :
Advertisement