ஜெர்மனியில் செவிலியர் வேலை.. மாதம் ரூ.2 லட்சம்.. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!
ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பவன்குமார். ஜி.கிரியப்பனவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கல்வித்தகுதி : ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பி1, பி2 நிலையில் ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதம் பணி அனுபவம் வேண்டும். டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த ஆண், பெண் என இருபாலரும் செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.. 38 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : இவர்களுக்கு ஆரம்ப நிலையில் மாதச் சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? தகுதியுள்ளவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 5ஆம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களை அறிந்து கொள்ள www.omcmanpower.tn.gov.in மற்றும் 044-22505886/63791 79200 என்ற எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
Read more ; எரும மாடா நீ..? பேப்பர் எங்க..? உதவியாளரை மேடையில் தரக்குறைவாக திட்டிய அமைச்சர் MRK பன்னீர் செல்வம்..!!