புது சிம் வாங்க போகும் நபர்களுக்கு... நாடு முழுவதும் நாளை அமலுக்கு வரும் ரூல்ஸ்...! முழு விவரம்
இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் மாதம் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி ( 9வது திருத்தம்) விதிமுறைகளை வெளியிட்டது. இது நாளை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராய் புதிய விதிமுறையின்படி சிம் கார்டு மாற்றுதல்,தொலைந்து போன அல்லது வேலை செய்யாத சிம் கார்டுக்கு பதில் புதிய கார்டை பெறுவதற்கான செயல்முறையாகும். இந்த விதியின்படி பயனர்கள் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி வசதியை தேர்வு செய்யலாம்.
இது ஒரு சேவை வழங்குனரிடம் இருந்து இன்னொரு சேவை வழங்குனருக்கு மாறுகையில் மொபைல் எண்ணை தக்க வைத்து கொள்ள அனுமதிக்கிறது.நாளை அறிமுகம் ஆகும் திருத்த விதிமுறைகள் மூலம் கூடுதல் நிபந்தனையை டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது. சிம் மாற்றப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் முன்பு மாற்றப்பட்டது. தற்போது அது 7 நாளாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் 7 நாட்களுக்கு முன் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், தனித்துவ போர்ட்டிங் கோட் ஒதுக்க கூடாது. நாட்டில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க இந்த புதிய விதிகளை டிராய் அமல்படுத்துகிறது. இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தகவல்களுக்கு, ஸ்ரீ அகிலேஷ் குமார் திரிவேதி, ஆலோசகர் (நெட்வொர்க், ஸ்பெக்ட்ரம் & உரிமம்), TRAI ஐ 91-11-20907758 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.