முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடுத்த 2 மணி நேரத்திற்கு..!! 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

According to the Meteorological Department, moderate rain with thunder and lightning is likely to occur in 19 districts in Tamil Nadu till 7 pm.
05:07 PM Aug 20, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது வடக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி மின்னலுடனும் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, குமரி, தென்காசி, திருப்பூர், கோவை, நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் வரும் 25ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : சுயதொழிலை ஊக்குவிக்கும் ’முத்ரா கடன்’ திட்டம்..!! இனி இது இருந்தால் தான் பணம் கிடைக்கும்..!!

Tags :
தமிழ்நாடுமிதமான மழைவானிலை ஆய்வு மையம்
Advertisement
Next Article