முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’மது குடிப்பவர்களைவிட கஞ்சா புகைப்பவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக அதிகரிப்பு’..!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

For the first time, the number of people who smoke cannabis has increased more than the number of people who drink alcohol every day, according to a study conducted in the United States.
07:41 AM May 23, 2024 IST | Chella
Advertisement

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், நாள்தோறும் மது அருந்துவோரின் எண்ணிக்கையை விட கஞ்சா புகைப்பவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement

கஞ்சா, மருத்துவ மற்றும் கேளிக்கைக்கான ஒன்றாக கடந்த 40 ஆண்டுகளில் பெரும்பாலான அமெரிக்க மாகாணங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022இல் பெறப்பட்ட தரவுகளின்படி, நாள்தோறும் அல்லது ஒரு நாளுக்கு நெருக்கமான இடைவெளியில் கஞ்சா எடுத்து கொள்பவர்கள் எண்ணிக்கை சுமார் 1.77 கோடி என்றும் அதே இடைவெளியில் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை 1.47 கோடி என்றும் தெரியவந்துள்ளது.

1992ஆம் ஆண்டில் நாள்தோறும் கஞ்சா எடுத்து கொள்வோரின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது. இந்த ஆய்வு மேற்கொண்ட கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் கஞ்சா சார்புடைய கொள்கைகள் பாட ஆய்வாளர் ஜோனாத்தன் கால்கின்ஸ், "ஆல்கஹால் பயன்பாடு தற்போதும் விரிவாக இருக்கிறது. ஆனால், கஞ்சா இந்தளவுக்கு தீவிரமாக அதிகரிப்பது இதுவே முதல்முறை" என தெரிவித்துள்ளார்.

மேலும், கஞ்சா உபயோகிப்பவர்களில் 40 சதவிகிதம் பேர் நாள்தோறும் எடுத்துக்கொள்பவர்களாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதைபொருள் பயன்பாடு மற்றும் ஆரோக்கியம் சார் தேசிய ஆய்வின் தரவுகள் புதன்கிழமை அடிக்‌ஷன் இதழில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் தாமாகவே முன்வந்து தங்களின் போதை பழக்கங்கள் குறித்து மக்கள் அளிக்கும் விவரங்கள் அடிப்படையில் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Read More : உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா..?நீங்கள் இதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்..? மறந்துறாதீங்க..!!

Advertisement
Next Article