'ப்யூர் வெஜ்' அசைவம் தடை செய்யப்பட்ட உலகின் முதல் நகரம்!! அதுவும் இந்தியாவில்.. பின்னணி என்ன?
உலக வரலாற்றிலேயே முதல் முறையாக குஜராத் மாநிலத்தின் பவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமணக் கொள்கைகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிதானாவில் உள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை மூடக்கோரி, சுமார் 200 ஜெயின் துறவிகளின் தொடர்ச்சியான எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகிம்சையை தங்கள் நம்பிக்கையின் மையக் கோட்பாடாகக் கருதும் ஜெயின் சமூகத்தினர், மற்ற உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்ற நெறிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.
ஜெயின் சமூகத்தினரை பொறுத்தவரை விலங்குகளை சாப்பிடும் வழக்கம் அவர்களிடம் இல்லை. நிலத்திற்கு அடியில் விளையும் காய்கறிகளை கூட தவிர்க்கிறார்கள். அதுதான் அசைவ உணவு தடைக்கு முக்கிய காரணமாகும். பாலிதானாவை முன்மாதிரியாக பின்பற்றி குஜராத்தில் உள்ள மற்ற நகரங்களான ராஜ்கோட், வதோதரா, ஜூனாகத், அகமதாபாத்தில் இதேபோன்ற விதிமுறைகளை அமல்படுத்த தொடங்கியுள்ளன. இந்த முடிவு, ஒருசேர ஆதரவையும் எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
Read more | சொத்து குவிப்பு வழக்கு : துணை முதல்வர் டிகே சிவகுமார் மனு தள்ளுபடி..!! உச்சநீதிமன்றம் அதிரடி