For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பேச்சுலர்களுக்கான.. வத்த குழம்பு பொடி.. இன்ஸ்டன்ட்டாக இனி சாப்பிடலாம்.!

05:42 AM Jan 11, 2024 IST | 1newsnationuser5
பேச்சுலர்களுக்கான   வத்த குழம்பு பொடி   இன்ஸ்டன்ட்டாக இனி சாப்பிடலாம்
Advertisement

தேவையான பொருட்கள் : வரமல்லி - 100 கிராம்,, வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு - 50 கிராம், மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, புளி - 20 கிராம், மஞ்சள் தூள் - அரை ஸ்பூன், சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன், வர மிளகாய் - 15, கடுகு - கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,கறிவேப்பிலை - ஒரு கொத்து, வெல்லம் - ஒரு டேபிள் ஸ்பூன், மணத்தன்னாளி வத்தல் - 20 கிராம்

Advertisement

செய்முறை : வர மல்லி, துவரம் பருப்பு,கடலை பருப்பு, வெந்தயம், மிளகு, சோம்பு, வெள்ளை எள், புளி, வர மிளகாய் அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக ஆறவிட்டு அதில் வெல்லம், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸிஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒருமுறை அரைத்து விட்டு அதை சலித்து மீண்டும் அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, மிளகாய் வத்தல் மற்றும் கருவேப்பிலையை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள இந்த பொடியை சேர்த்து கலக்க வேண்டும். நன்றாக கலந்து விட்டு இறக்கி ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து ஆறு மாதங்கள் வரை இதை பயன்படுத்தலாம். குழம்பு வைக்க முடியாத தருணங்களில் இதில் இரண்டு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்தால் வத்த குழம்பு தயார். ஹாஸ்டல்கள் மற்றும் வெளியூர்களில் தாங்கிய வேலை பார்க்கும் பேச்சுலர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

Tags :
Advertisement