For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"கூந்தல் ஆரோக்கியத்திற்கு…" எளிய முறையில் பயோடின் ஸ்மூத்தி செய்வது எப்படி.? எளிமையான ரெசிபி இதோ.!

06:27 AM Nov 24, 2023 IST | 1newsnationuser4
 கூந்தல் ஆரோக்கியத்திற்கு…  எளிய முறையில் பயோடின் ஸ்மூத்தி செய்வது எப்படி   எளிமையான ரெசிபி இதோ
Advertisement

கூந்தல் ஆரோக்கியம் மற்றும் சருமம் பளபளப்பாக இருக்க நட்ஸ் வச்சு பிரிப்பேர் பண்ற இந்த சூப்பரான மில்க் ஷேக் ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெசிபியும் ரொம்ப சிம்பிள்.முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் 4 அத்திப்பழம், ஒரு டேபிள் ஸ்பூன் கிஸ்மிஸ், ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி, ஒரு டேபிள் ஸ்பூன் வால்நட், ஒரு டேபிள் ஸ்பூன் எள்ளு ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகள் மற்றும் ஐந்து பேரீத்தம் பழம் ஆகியவற்றை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

Advertisement

காலையில் இதை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு இவற்றுடன் கால் லிட்டர் பால் மற்றும் ஒரு வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இந்தக் கலவை நன்றாக அறைந்ததும் அதை ஜாரில் இருந்து கிளாஸ் இருக்கு மாற்றினால் அருமையான பயோட்டின் மில்க் ஷேக் ரெடி.

இதில் இரும்புச் சத்து பொட்டாசியம் கால்சியம் புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இந்த மில்க் ஷேக் கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு ரத்த உற்பத்தி எலும்புகள் வலுப்பெறுதல் போன்ற பலவற்றிற்கும் உதவுகிறது.

Tags :
Advertisement