முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

24-ம் தேதி வரை டைம்... 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாத நபர்களுக்கு மட்டும்...

07:06 AM May 11, 2024 IST | Vignesh
Advertisement

குடியிருப்பு வாரியாக 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத நபர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 ன் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டமானது முற்றிலும் தன்னார்வல முறையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 14708 பேர் தங்களது அடிப்படை எழுத்தறிவுக் கல்வியைப் பெற்று பயனடைந்துள்ளனர்.

Advertisement

இவர்கள் அன்றாட வாழ்வில் தற்சார்பு, வாழ்வியல் திறன்களில் மேம்பாடு, சுய வருவாய் ஈட்டுதலில் முன்னேற்றம், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த நிதி மேலாண்மையில் தெளிவு, அடிப்படைச் சட்டங்களிலும் மற்றும் அரசு சார் திட்டங்களிலும் போதுமான விழிப்புணர்வு போன்ற அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப் பெற்றுள்ளனர். மேலும் இவர்களுக்கு தேசிய திறந்த நிலைப் பள்ளி மூலம் அடிப்படை எழுத்தறிவு பெற்றவர் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிப்பு செய்திடுவது மிகவும் அவசியமாகிறது. இதனைக் கருத்திற்கொண்டு. மாவட்டம் முழுவதும், அனைத்து ஒன்றியங்களிலும் குடியிருப்பு வாரியாக 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத அனைவரையும் கண்டறியக் கூடிய விரிவான கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டு கணக்கெடுப்பு பணி தற்போது தொடங்கப்பட்டு 2024-மே மாதம் 24ஆம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது.

வருகின்ற 2024- 25 ஆம் ஆண்டிற்கு அனைத்து ஒன்றியங்களுக்கான கற்போர் மற்றும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பின் வாயிலான பெறப்படும் எண்ணிக்கை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு கற்போர் மையம் தொடங்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத எவரேனும் இருந்தால் அருகாமையில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்து கற்போர் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article