100% ரிசல்ட்!!! உடல் எடையை சட்டுன்னு குறைக்க, தினமும் காலை இந்த பழம் சாப்பிடுங்க..!
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நம்மை டாக்டரிடம் இருந்து விலக்கி வைக்கும். இது வெறும் பழமொழி மட்டுமல்ல. பல அறிவியல் ஆய்வுகளின் முடிவும் கூட. இவ்வளவு மகத்துவம் நிறைந்த ஆப்பிளை தினமும் காலை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவும் ஏற்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?
ஆப்பிளில் அதிகம் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றை நீண்ட நேரம் நிரம்ப வைக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் அதிகப்படியான கலோரிகள் எடுத்துக்கொள்வதை தடுக்கிறது. ஆப்பிளில் குறைத்த அளவே கலோரிகள் உள்ளது. இதனால் தினசரி காலை இதனை உட்கொள்வது சிறந்தது. ஆப்பிள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவியாக உள்ளது. இதனால் உடலில் தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆப்பிள் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும் அபாயத்தை குறைக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் ஆப்பிளை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
இதில் உள்ள இயற்கையான சர்க்கரை நம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது. ஆப்பிளில் உள்ள பைபர் பெக்டின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் நம் இதயத்தை ஆரோக்கியமாக இருக்கும். ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் மலச்சிக்கல் சரியாகிறது. மேலும் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாறுகிறது.
Read more: இவர்கள் எல்லாம் காதுகளை சுத்தம் செய்யவே வேண்டாம்.. மருத்துவர் அளித்த தகவல்..