For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடிமேல் அடி!. கிளர்ச்சியாளர்களின் அட்டூழியம்!. 24 ஆண்டுகள் சிரிய அதிபரான ஆசாத்!. ரஷ்யாவில் தஞ்சம்!

06:06 AM Dec 09, 2024 IST | Kokila
அடிமேல் அடி   கிளர்ச்சியாளர்களின் அட்டூழியம்   24 ஆண்டுகள் சிரிய அதிபரான ஆசாத்   ரஷ்யாவில் தஞ்சம்
Advertisement

Syria - Russia: சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை, கிளர்ச்சி படைகள் கைப்பற்றிய நிலையில் அந்த நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத், ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Advertisement

மேற்காசிய நாடான சிரியாவில், 2000ம் ஆண்டில் இருந்து அதிபராக இருந்தவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவருடைய தந்தை ஹபீஸ் அல் ஆசாத் அதிபராக இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து பதவியேற்ற ஆசாத், தந்தை வழியில் எதிர்ப்பாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கினார். அவர் பதவியேற்றபோது, நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஆட்சி அதிகாரத்துக்காக, தன்னை எதிர்ப்போரை கட்டுப்படுத்தி, முழு அதிகாரத்தையும் தன் கைக்குள் வைத்திருந்தார்.

கடந்த, 2011ல் அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகள் இணைந்தன. கடந்த, 14 ஆண்டுகளில் ஆசாத் நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகளால் உள்நாட்டு போரில் ஐந்து லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம், 2.3 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில், பாதிக்கும் மேற்பட்டோர், உள்நாட்டிலேயே புலம் பெயர நேர்ந்தது. இதைத் தவிர, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

போராட்டம் தீவிரமடைந்தாலும், ஆசாத்தின் கட்டுப்பாடுகள் குறையவில்லை. இந்நிலையில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் ஒரு பகுதியான, எச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற பிரிவினைவாத அமைப்பு தலைமையிலான அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ம் தேதி தீவிர தாக்குதலை துவங்கின. அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் சுற்றி வளைத்தன.

இதைத் தொடர்ந்து, டாரா, குனேத்ரா, சுவேடா ஆகிய நகரங்களையும் கைப்பற்றின. இதைத் தொடர்ந்து, தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றும் நோக்கத்தோடு மிக வேகமாக இந்தப் படைகள் முன்னேறின. எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், சிரியா ராணுவம், போலீசார், டமாஸ்கசில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, நேற்று காலையில், டமாஸ்கசை கைப்பற்றியதாக கிளர்ச்சிப் படைகள் அறிவித்தன. இதற்கிடையே, அதிபர் ஆசாத், விமானம் வாயிலாக தப்பிச் சென்றார். இதையடுத்து, நாட்டின் நிர்வாகம் தங்களுடைய கட்டுப்பாட்டுகள் வந்துள்ளதாக கிளர்ச்சிப் படைகள் தெரிவித்தன.

ஆனால் ஆசாத் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்தநிலையில் அதிபர் ஆசாத்க்கு அடைக்கலம் வழங்கியிருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. தலைநகர் டமாஸ்கஸிலிருந்து தப்பிச் சென்ற அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆதரிப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. அதிபர் ஆசாத்தின் ஆட்சியின்போது சிரியாவின் முக்கிய நட்பு நாடாக ரஷ்யா இருந்தது.

அதாவது, சிரியாவில் 2000ம் முதல் சுமார் 24 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஆசாத், துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியதால் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். இதனால், கிளர்ச்சியாளர்கள் வசம், சிரியா நாடு முழுவதும் சென்றது. சிரியாவில் ரஷ்யாவுக்கு சொந்தமான 2 ராணுவ தளங்கள் உள்ளன. இந்த 2 ராணுவ தளங்களில் இருந்தே முக்கிய கடல் பகுதியான மத்திய தரைக்கடலில் ரஷ்ய கடற்படை ஆதிக்கம் செலுத்தி வந்தது.

சிரிய அதிபர் ஆசாத், ரஷ்ய ராணுவ தளங்களை அனுமதித்த நிலையில், இனி கிளர்ச்சியாளர்கள் அனுமதிப்பார்களா என்று ரஷ்யாவுக்கு கவலை எழுந்துள்ளது. ஒருவேளை அனுமதிக்கவில்லை என்றால், அங்கிருந்து ரஷ்ய ராணுவம் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி வெளியேறினால், மத்திய கிழக்கு ஆசியாவில் ரஷ்யாவின் புவிசார்ந்த நலன்கள் பாதிக்கப்படும். எனவே, ரஷ்யா அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை காண உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன.

Readmore: ஆஹா!. மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் வந்தாச்சு!. அம்சங்கள் இதோ!. ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியாச்சு!.

Tags :
Advertisement