முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்க குழந்தையின் உயரம் அதிகரிக்க வேண்டுமா? இதை கொடுத்து பாருங்க, ஒரே மாதத்தில் வித்யாசம் தெரியும்..

foods to increase your children height
05:18 AM Dec 22, 2024 IST | Saranya
Advertisement

பல பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய கவலை தங்களின் குழந்தை உயரமாக இல்லை என்பது தான். தங்களின் குழந்தை எப்படியாவது உயரமாக வந்து விட வேண்டும் என்று, போலியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடுகிறார்கள். இதை குடித்தால் உங்கள் குழந்தை உயரமாவார்கள் என்று சொல்வதை நம்பி நாம் வாங்கி தரும் பானம், குழந்தைகளின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பெற்றோர்கள் மரபணு காரணமாக குள்ளமாக பிறக்கும் குழந்தைகள் உண்டு. இது இயற்கை தான்.

Advertisement

ஆனால், பெற்றோர்கள் உயரமாக இருந்தும் குள்ளமாக இருக்கும் குழந்தைகளுக்கு உணவுப் பட்டியலில் சிறு மாற்றம் செய்தால் அவர்கள் உயரம் அதிகரித்து விடும். வைட்டமின் ஏ, வைட்டமின் கே , வைட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, நார்ச்சத்துக்கள், மெக்னீசியம் போன்ற  சத்துக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைகள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் குழந்தைகள் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம். இந்த சத்துக்கள் எல்லாம் எந்த உணவுகளில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

பால், தயிர், சீஸ் போன்ற பொருட்களில் கால்சியம் அதிகம் இருக்கும். தினமும் குழந்தைகளுக்கு இரண்டு கிளாஸ் பால் கொடுத்தால், அது எலும்பை வலுவடையச் செய்வது மட்டும் இல்லாமல், குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கும். பால், பால் சம்மந்தப்பட்ட பொருள்களை விரும்ப மாட்டார்கள் என்றால், உலர்ந்த அத்திப்பழத்தையோ (அல்லது) புதிய அத்திப்பழத்தையோ தினமும் நான்கு கொடுக்கலாம். இதில், கால்சியம் அளவு அதிகம் உள்ளதால், இது குழந்தைகளின் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும், சியா, பாதாம், எள், செலரி மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் கால்சியம் அதிகம் உள்ளதால், இந்த வகை பொருட்களும் உங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு அசைவம் முக்கிய பங்கு வகிக்கிறது. சால்மன் மீன் ஆரோக்கியமான கொழுப்பைக் கொண்டதால், இது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். தினமும் ஒரு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் கட்டாயம் அவர்களின் உயரம் அதிகரிக்கும். குள்ளமான குழந்தைகளை வளர செய்ய வாரத்திற்கு இரண்டு, மூன்று முறையாவது முளைக்கீரையை உணவில் சேர்க்க வேண்டும்.

Read more: சர்க்கரை நோய், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு 50% குறையும்… இன்றே இதை செய்ய தொடங்குங்க..

Tags :
children heighthealthhealthy foods
Advertisement
Next Article