டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.!
சர்க்கரை நோய் இன்று உலகில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான நோய்களில் முதன்மையில் இருக்கிறது. வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு நோயாகும். முறை மாற்றங்கள் அதிக கொழுப்பு உள்ள உணவு முறை மற்றும் மரபணு ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
டைப்2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆப்பிள் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. மேலும் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. ஆப்பிள் பழங்களில் இருக்கக்கூடிய பாலிபினால்கள் இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்துவதோடு இதயத்தின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வைக்கிறது. ஆப்பிளில் இருக்கக்கூடிய ஃபிரக்டோஸ் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சிறந்த உணவுகளில் ஒன்று கேரட் . இதில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருந்தாலும் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து பொட்டாசியம் மக்னீசியம் ஆகியவையும் நிறைந்திருக்கின்றனர். உங்கள் இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்து கொழுப்புக்களை கட்டுப்படுத்துவதோடு அதிக உணவு உட்கொள்வதையும் தடுக்கிறது.
நீரிழிவு நோய் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியமான உணவுகளில் மற்றொன்று காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள். இவை செரிமானமாகி மெதுவாகவே ரத்தத்தில் சர்க்கரையை கலக்கச் செய்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் மினரல்கள் உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்துகின்றன.
சியா விதைகளும் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்த உணவாகும். இவற்றில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்திருக்கிறது. இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு டைப் 2 நீரிழிவு நோயால் ஏற்படும் இதய பாதிப்புகளில் இருந்தும் காக்கிறது.