உங்க குழந்தை ஒல்லியா இருக்கா? குழந்தைகள் எடை அதிகரிக்க, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்…
பெரும்பாலான தாய்மார்களின் புலம்பல், “என்ன குடுத்தாலும் என்னோட குழந்தை எடை கூட மாட்டிக்குது”. இப்படி புலம்பும் தாய்மார்கள் எப்படியாவது தனது குழந்தையின் எடையை அதிகரித்து விட வேண்டும் என்று நினைத்து, பல நேரங்களில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை கொடுத்துவிடுவது உண்டு. ஆம், உதாரணமாக பிஸ்கட், சாக்லேட் போன்ற தின்பண்டங்களை வயிறு நிரஞ்சா போதும் என்று கொடுத்துவிடுகிறோம். இதனால் அவர்களுக்கு பசி இல்லாமல் போய்விடும். பிறகு என்ன தான் கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்கள். மேலும் சிலர், ராகி கூழ் குடித்தால் தான் எடை கூடும் என்று தினமும் ராகியை தவிர வேறு எதுவும் கொடுக்க மாட்டார்கள். இதனால் குழந்தைகள் உணவு சாப்பிடுவதையே வெறுத்து விடுவார்கள்.. அதனால் ஒரே உணவை தொடர்ந்து கொடுக்க வேண்டாம்.
மாற்றாக, தினமும் புதுப்புது உணவுகளை கொடுக்கும் போது அவர்களே விரும்பி சாப்பிடுவர்கள். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும். குழந்தையின் உடல் எடை அதிகரிப்பதற்கான உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த உணவுகள் உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை வழங்க முடியும்.
உலகத்திலேயே சிறந்த, ஆரோக்கியமான உணவு என்றால் அது தாய்ப்பால் தான். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் தாய்ப்பால் கொடுங்கள். ஒரு நாளைக்கு 8-12 முறை தாய்ப்பால் கொடுங்கள்.
வாழைப்பழம் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க உதவும் ஒரு நல்ல உணவு. குழந்தைக்கு திட உணவைத் தொடங்கும் போது, வாழைப்பழம் கொடுப்பது சிறந்தது. வாழைப்பழத்தில் கொழுப்புகள், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் ஏ, பி, சி, டி மற்றும் கே போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளது.
பருப்பு அல்லது பருப்பு வகைகள் குழந்தைகளின் எடை அதிகரிக்க மிகவும் உதவும். பருப்பில், நார்ச்சத்து அதிகம் உள்ளது. பருப்பை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சூப்பாகவோ அல்லது அரிசி மற்றும் காய்கறிகளுடன் சமைத்தும் கொடுக்கலாம்.
பூசணி, ஆளி, சியா போன்ற விதைகள் மற்றும் உலர் பழங்களான பாதாம், முந்திரி, திராட்சை மற்றும் பிஸ்தா ஆகியவை குழந்தையின் எடையை அதிகரிக்கும். இவைகளை நீங்கள் பொடி செய்து பாலில் கலந்து கொடுக்கலாம். அல்லது இந்த பொடியை தோசை, கூழ் ஆகிய உணவுகளுடன் சேர்த்து கொடுக்கலாம். இந்த உணவை மருத்துவரின் அறிவுரைப்படி 1 அல்லது 2 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பால் பொருட்கள், பாலாடைக்கட்டி, முழு கொழுப்புள்ள தயிர், பால், நெய் மற்றும் முட்டை போன்றவற்றை குழந்தைகளின் எடையை நன்கு அதிகரிக்கும். சுமார் 8 மாதங்களுக்குள், உங்கள் குழந்தையின் உணவில் நெய்யை அறிமுகப்படுத்தத் தொடங்குங்கள். தயிரில் குழந்தைகளின் எடை அதிகரிக்க உதவும் புரோபயாடிக்குகள் உள்ளன, மேலும் இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும்..
Read More : கைகளில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க முடியாதா..? தீயாய் பரவும் தகவல் உண்மையா..?