கர்ப்பிணிகளே.. ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்கள்..
தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை, ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது தான். இந்த பிரச்சனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அநேகருக்கு இந்த பிரச்சனை உள்ளது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பல பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவது உண்டு. இதற்காக பல மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது உண்டு. ஆனால், நாம் உணவு பழக்கத்தின் மூலம் ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரித்து ரத்த சோகை பிரச்சனையை குணப்படுத்தலாம். ரத்த சோகையை குணப்படுத்தும் சிறந்த உணவை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்...
சுண்டைக்காய், பலருக்கும் தெரிந்த ஒன்று தான். சுண்டைக்காய் ருசியில் சற்று கசப்புத்தன்மையினை கொண்டிருக்கும். ஆனால் இதில் இல்லாத சத்துக்களே இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த சுண்டைக்காயில், அதிகளவு கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து உள்ளிட்டவை உள்ளது. இதனால், சுண்டைக்காயை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி மலச்சிக்கல், அஜீரணம், உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது. மேலும், சுண்டைக்காயில் உள்ள குளோரோஜெனின், ஃபினைல் உள்ளிட்ட கூறுகள், இரைப்பையில் ஏற்படும் அழற்சியை தடுத்து, கணையத்தில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது.
சுண்டைக்காயில் இத்தனை நன்மைகள் இருந்தாலும், உடலில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதை விட சிறந்த மருந்து இருக்க முடியாது. சுண்டைக்காயை நாம் தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள இரும்புச்சத்து நமது ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், சுண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து, நமது செரிமான அமைப்பு சீராகி எளிதில் ஜீரணமாக உதவுவதோடு. உடல் எடையை குறைக்கவும் இது பயன்படுகிறது. கர்ப்பிணிகள் இதை சாப்பிடும் போது, ஒரு முறை உங்கள் மருத்துவரிடன் உங்கள் உடலுக்கு இது ஏற்றதா என்று ஆலோசனையை கேட்டுக்கொள்ளுங்கள்..
Read more: பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தா; 8-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம்..