வயசானாலும் உங்கள் எலும்புகள் பலமாக இருக்க வேண்டுமா?? அப்போ உடனே இந்த பழக்கத்தை மாத்துங்க..
நமது முன்னோர் 70, 80 வயதிலும் கூட திடமாக இருந்தனர். அவர்களின் வேலைகளை அவர்களே செய்தனர். ஆனால் இன்று, 30 வயதை தாண்டுவதற்கு முன்பே கால் வலி, முதுகு வலி என அனைத்து வலிகளும் வந்து விடுகிறது. இதற்க்கு முக்கிய காரணம் நமது உணவு முறை தான். ஆம், நமது முன்னோர் ராகி, காய்கறிகள், உளுந்து போன்ற ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தனர். ஆனால் இந்த தலைமுறையினர், பர்கர், பீசா, நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அதனால் தான் ஆரோக்கியமும் துரிதமாக கெட்டு விடுகிறது.
60, 70 வயது ஆனாலும் எலும்புகள் வலுவாக இருக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். கேழ்வரகு, பாலை விட அதிக அளவு கால்சியம் இதில் உள்ளது. இதனால் உங்கள் எலும்பு வலுமையாக இருக்க கட்டாயம் கேழ்வரகை சாப்பிட வேண்டும். இதை நீங்க கஞ்சியாகவோ, தோசையாகவோ உங்கள் விருப்பப்படி சாப்பிடலாம். கேழ்வரகை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் தாராளமாக கொடுக்கலாம். மேலும், உங்கள் எலும்புகள் உறுதியாக இருக்க பப்பாளி, பீன்ஸ், பாதாம், முந்திரி, நட்ஸ் வகைகள், பிரண்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
வாரம் ஒரு முறையாவது, ஆட்டுக்கால் சூப் செய்து குடிப்பதால் உங்கள் எலும்புகள் வலுபெறும். கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் பலமாக இருக்கும். இவற்றையெல்லாம் அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், நாம் எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனால் உங்கள் ஆரோக்கியத்தை மட்டும் இன்றி, உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை சிறு வயது முதல் கற்றுத் தருவது அவசியம்..