மூட்டுவலி, கால்வலி எல்லாம் காணாமல் போகும்.. இந்த ஊத்தாப்பம் சாப்பிட்டு பாருங்க..!
வளர்ந்து வரும் இந்த நவீன உலகில் இளம் வயதினருக்கு கூட கை,கால் வலி,மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் வந்துவிடுகிறது. இதற்கு காரணம் சுவைக்கு ஆசைப்பட்டு சரியான உணவு முறையை கடைபிடிக்க தவறுவது. சுவையாகவும் அதே நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் உளுந்து முட்டை ஊத்தாப்பம் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்
தேவையான பொருட்கள் :
உளுந்து - ஒரு கப்
முட்டை - 2
கேரட் - 1
பெரிய வெங்காயம் -2
மிளகு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ஒரு கப் அளவிற்கான உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 2 முட்டை மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் கேரட் துருவல், பெரிய வெங்காயம் சேர்த்து மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தோசை கல் சூடானதும் ஒரு கரண்டி எடுத்து ஊத்தப்பம் போல் ஊற்ற வேண்டும். பின்னர் மிளகு, சீரகத்தூள் மல்லித்தழை தூவி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி நன்றாக வெந்தபின் எடுத்து சுவையான சட்டினியுடன் பரிமாறலாம். உளுந்து கை,கால் வலி, மூட்டுவலி, எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணத்தை கொடுக்கிறது.
Read more: தினமும் தொப்புளில் 2 சொட்டு எண்ணெய் தேய்த்தால் போதும்.. இனி இந்த வலி உங்களுக்கு இருக்காது..