கை, கால், இடுப்பு வலி அதிகமா இருக்கா? அப்போ இனி இதை சாப்பிடுங்க.. உங்களுக்கே வித்தியாசம் தெரியும்..
பொதுவாக முன் ஒரு காலகட்டத்தில், நமது தாத்தா, பாட்டி அல்லது அப்பா, அம்மாவிற்கு வந்த நோய்கள் தற்போது இளைய தலைமுறையினரையும் எளிதில் தொற்றிக் கொள்கிறது. ஆம், ஒரு காலகட்டத்தில் 60 வயதுக்கு மேல் தாத்தா, பாட்டி கால், மூட்டு வலிக்கிறது என்று கூறுவார்கள். அதன் பின்னர் நமது பெற்றோர் 50 வயதை அடையும் போது இதை சொல்ல கேட்டிருப்போம். ஆனால், தற்போது முப்பது வயது இளைஞர்களும் தனது பெற்றோரிடம் கை, கால், மூட்டு வலிக்கிறது, வேலையே செய்ய முடியவில்லை என புலம்புவதை பார்க்கிறோம்.
அந்த அளவிற்கு நமது ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. நாகரீகம் எதிர பெயரில் சத்தான எந்த உணவுகளையும் எடுத்துக்கொள்வது இல்லை. உலக அளவில் 600 மில்லியன் மக்களுக்கு மேல் மூட்டு எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. முழங்கால் மூட்டு தவிர இடுப்பு, தோள்பட்டை, கணுக்கால் மூட்டு என இதர மூட்டுகளும் பாதிப்படையும். ஆண், பெண் என 40 வயது முதல் 50 வரையிலான மக்களுக்கு தற்போது இந்த பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் அதிகமாக மூட்டு வலி பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் கட்டாயம் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர், நீண்ட காலம் இது போன்ற வலி இல்லாமல் இருந்ததுக்கு முக்கிய காரணம் அவர்களின் உணவு பழக்கங்கள் தான். அதிலும் குறிப்பாக அவர் எடுத்துக்கொண்ட உளுந்தங்கஞ்சி உடலுக்கு பல மடங்கு பலத்தை கொடுத்தது. ஆனால் நம்மில் பலர் இது போன்ற சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதே இல்லை. நமது குழந்தைகளுக்கும் கொடுப்பது இல்லை. இதனால், இனி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, சுவையான ஆரோக்கியமான உளுந்து கஞ்சியை உங்கள் குடும்பத்தினருக்கு செய்து கொடுங்கள்..
இதற்கு முதலில், அடுப்பில் கடாய் வைத்து, உளுந்து பருப்பு போட்டு நன்கு வறுக்கவும். தோல் உளுந்து பருப்பில் அதிக சத்து உள்ளதால், அதனை பயன்படுத்துவது சிறந்தது. இப்போது வறுத்த உளுந்து பருப்பை தனியாக ஒரு தட்டில் வைத்து விடுங்கள். இப்போது அதே கடாயில், அரை கப் பச்சரிசியை வறுத்து தனியாக எடுத்து வைத்து விடுங்கள். உளுந்து பருப்பும், அரிசியும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொளுங்கள். இப்போது அந்த மாவை சல்லலடையில் போட்டு சலித்து எடுத்தால், உளுந்தங்கஞ்சி செய்ய இன்ஸ்டன்ட் பொடி ரெடி..
இப்போது காஞ்சி தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு உளுந்தங்கஞ்சி பொடி சேர்த்து, தண்ணீர் ஊற்றி, கட்டி இல்லாமல் கரைத்து விடுங்கள். இப்போது அதை அடுப்பில் வைத்து, 3-4 நிமிடம் கொதிக்க விடவும். காஞ்சி சற்று கெட்டியாக வந்ததும் அதில் கால் டீஸ்பூன் ஏலக்காய், சுக்குப் பொடி போட்டு அரை கப் பால் சேர்த்து கலக்கி விடுங்கள். இப்போது உங்களின் சுவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வையுங்கள். சுவையான ஆரோக்கியமான உளுந்தங்கஞ்சி ரெடி.
Read more: இந்த ஒரு பானத்தை மட்டும் குடிங்க.. இனி சளி, காய்ச்சலுக்கு மாத்திரையே சாப்பிட வேண்டாம்..