முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உணவுப்போட்டி!. இட்லி சாப்பிடும்போது மூச்சுத்திணறி ஒருவர் பலி!. ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்!

Man dies while eating idli in Palakkad, here's what happened
09:01 AM Sep 15, 2024 IST | Kokila
Advertisement

Palakkad: பாலக்காடு அருகே வாளையாரில் நடந்த உணவுப் போட்டியின் போது இட்லி சாப்பிடும்போது மூச்சுத் திணறி 49 வயது நபருக்குர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஓணம் என்பது கேரள மக்களால் கொண்டாடப்படும் வருடாந்திர அறுவடை மற்றும் கலாச்சார திருவிழா ஆகும். இந்த ஆண்டு, ஓணம் செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 15 வரை கொண்டாடப்படும், முக்கிய ஓணம் தினமான திருவோணம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தாண்டு, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதனால், இந்தாண்டு ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்படாது என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் ஆங்காங்கே சின்ன சின்ன ஏற்பாட்டுகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பாலக்காடு அருகே வாளையாரில் உள்ளூர் கிளப் ஏற்பாட்டில் உணவுப்போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில், ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் சுரேஷ் என்பவரும் பங்கேற்றுள்ளார்.

இட்லியை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அவரை காப்பாற்ற முயன்று, எப்படியோ இட்லியை வெளியே எடுத்துள்ளனர்' . இருப்பினும், மருத்துவமனைக்கு கொண்டும் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: கொட்டித்தீர்க்கும் கனமழை!. தாஜ்மஹாலில் கசிவு!. ஷாஜகான் கல்லறைக்குள் நீர் புகுந்ததால் அதிர்ச்சி!

Tags :
Food competitionidlyOne deadPalakkad
Advertisement
Next Article