முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி..!! தமிழ்நாடு அரசின் திட்டத்தை பாராட்டிய ஐகோர்ட் கிளை..!!

Madras High Court Branch has said that Tamil Nadu government's scheme for destitute girl children is commendable.
08:56 AM Aug 21, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு அரசின் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான திட்டம் பாராட்டுக்குரியது என சென்னை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

Advertisement

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொண்டர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”12ஆம் வகுப்பு மாணவியான எனது மகளை கடந்த மாதம் முதல் காணவில்லை. காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிட வேண்டும்” என அவர் கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகங்கை மாவட்ட காவல்துறையினர், காணாமல்போன மாணவியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தன்னை யாரும் கடத்தவில்லை, நண்பர்களுடன் தங்கியிருந்தேன், எனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என மாணவி தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட மாணவி, மதுரையில் தங்கி பாதுகாப்புடன் கல்வி பயில்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு குற்றவியல் வழக்குரைஞர் செந்தில்குமார் முன்னிலையாகி, மாணவியை மதுரையில் உள்ள அரசு பாலர் இல்லம் குழந்தைகள் நலக் காப்பகம் சார்பில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறுமியை மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பில் சேர்க்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ”இந்த வழக்கில் மாணவிக்கு உடனடியாக பாதுகாப்பான இடமும், கல்வியும் வழங்க நடவடிக்கை மேற்கொண்ட அரசு வழக்குரைஞரின் செயல் சிறப்பானது. ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள், மாணவிகள் பயனடையும் வகையில், குழந்தைகள் நலன், சிறப்பு சேவை துறையானது அவர்களுக்கு உணவு, உடை, கல்வி என அனைத்தும் வழங்கி வருகிறது.

தமிழக அரசின் இந்தத் திட்டம் பாராட்டுக்குரியது. அதேநேரம், மாணவிக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்ததுடன், மனநல ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். அவரது பெற்றோருக்கு உரிய சட்ட ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

Read More : நண்பர்களுடன் பார்ட்டி..!! போதையில் தள்ளாடிய மாணவி..!! தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த கொடூரம்..!!

Tags :
உயர்நீதிமன்ற கிளைதமிழ்நாடு அரசுபெண் குழந்தைகள்
Advertisement
Next Article