For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வயநாடு நிலச்சரிவு | பாரம்பரிய ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்த கேரள அரசு..!!

Following the Wayanad disaster, the Kerala government has announced that it will cancel the celebrations of Onam, one of the main festivals of the Malayalam people.
07:49 PM Aug 22, 2024 IST | Mari Thangam
வயநாடு நிலச்சரிவு   பாரம்பரிய ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்த கேரள அரசு
Advertisement

வயநாடு பேரழிவை தொடர்ந்து மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகையின் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

Advertisement

மலையாளம் பேசும் மக்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஓணம் ஆகும். ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட சில நாட்களே உள்ளது. கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா, பலருக்கும் பிடித்த சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. அந்த வகையில், வயநாடு மாவட்டம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் மும்மரமாக நடந்து வர, சினிமா பிரபலங்கள் பலர் கேரள அரசுக்கு நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த நிலையில், கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் வார கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு பேரழிவால் ஓணம் கொண்டாட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Read more ; பதவி ஏற்றதுமே ஷாக்.. தலைமைச் செயலர் நேரில் ஆஜராக வேண்டும்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

Tags :
Advertisement