மாரடைப்பு வராமல் தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க..!! இதயத்தை ஆரோக்கியமா வெச்சிக்கோங்க..!!
கார்டியோவாஸ்குலர் நோயானது முக்கியமான உலகளாவிய சுகாதார கவலையாக தொடர்ந்து வருகிறது. உலகளவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கான முக்கிய காரணங்களாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிக எண்ணிக்கையிலான மரணத்தை ஏற்படுத்தும் இந்த நிலைமைகள் தவிர்க்க முடியாதவை அல்ல. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உரிய மருத்துவ சிகிச்சைகள் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளலாம்.
தினசரி உடற்பயிற்சி : வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடம் உடற்பயிற்சி அல்லது 75 நிமிட தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். விறுவிறுப்பான நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் அல்லது நீச்சல் போன்ற செயல்பாடுகள் கார்டியோவாஸ்குலர் ஃபிட்னஸை அதிகரிக்கவும், இதய தசையை வலுப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. கார்டனிங் அல்லது படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற எளிய செயல்பாடுகள் கூட கொலஸ்ட்ரால் லெவலை குறைப்பதன் மூலமும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன.
சரிவிகித டயட் : உங்களது இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால், ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் டயட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் ப்ரோட்டீன் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளிட்டவற்றை சீரான அடிப்படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக சேச்சுரேட்டட் ஃபேட்ஸ், டிரான்ஸ் ஃபேட்ஸ் மற்றும் அதிகப்படியான சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இவை உடல் பருமன், ஹை கொலஸ்ட்ரால் மற்றும் பிற இதய அபாயங்களை ஏற்படுத்துவதில் பங்கு வகிக்கின்றன.
மன அழுத்தம் : பொதுவாக நாள்பட்ட மன அழுத்தம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதன் மூலம் இதய நோய்க்கு பங்களிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாள்பட்ட மனஅழுத்தம் அதிகப்படியான உணவு சாப்பிடுவது அல்லது புகைப்பிடித்தல் போன்ற ஆரோக்கியமற்ற நடத்தைகளை ஏற்படுத்தி உடலில் அழற்சியை அதிகரிக்கிறது. எனவே தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், யோகா போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை பின்பற்றுவது மனம் மற்றும் உடலை ரிலாக்ஸாக வைக்க உதவும். மேலும் புத்தகங்கள் படிப்பது, ஓவியம் வரைவது அல்லது இயற்கையில் நேரத்தைச் செலவிடுவது, மகிழ்ச்சியான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
ரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும் : உயர் ரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர் டென்ஷன் பெரும்பாலும் “சைலன்ட் கில்லர்” என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இது அறிகுறிகளை வெளிப்படையாக காட்டாது. ஆனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. எனவே, வீட்டிலேயோ அல்லது சுகாதார நிபுணரிடம் சென்றோ சீரான இடைவெளியில் உங்கள் ரத்த அழுத்தத்தை அவ்வப்போது கண்காணித்து தேவைப்பட்டால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சோடியம் குறைந்த உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுங்கள்.
ஆரோக்கியமான எடை : இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல் தீவிர நிலைகளை ஏற்படுவதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக உடல் பருமன் இருக்கிறது. ஆரோக்கியமான டயட் மற்றும் தினசரி தவறாமல் உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரித்து மேற்கண்ட அபாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைத்து கொள்ளலாம்.
வழக்கமான அடிப்படையில் செக்கப் : இதய பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியம். சீரான இடைவெளியில் எடுக்கப்படும் கொலஸ்ட்ரால் டெஸ்ட், ஈசிஜி மற்றும் பிற சோதனைகளை செய்து கொள்வது கடும் இதய சிக்கல்களின் ஆபத்தை குறைக்கிறது.
மிதமான அளவில் மது : அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் ரத்த அழுத்தம் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை அதிகரிக்க செய்யலாம். இவை இதய நோய்க்கு பங்களிக்க கூடும். பெண்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு ட்ரிங்க்ஸ், ஆண்கள் ஒரு நாளைக்கு 2 ட்ரிங்ஸ் வரை மட்டும் அருந்தலாம் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது. ஆனால், முடிந்தவரை மதுவை தவிர்ப்பது அதற்கு பதில் ஆரோக்கிய பானங்களை பருகுவது இதய நோய்களுக்கான அபாயங்களை குறைக்க உதவும்.
புகைப்பழக்கத்திற்கு நோ : இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாக புகைப்பழக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பழக்கம் ரத்த நாளங்களை சேதப்படுத்தில், ரத்த அழுத்த அளவை உயர்த்துகிறது மற்றும் atherosclerosis நிலைக்கு பங்களிக்கிறது.
Read More : தோனி விவசாயம் செய்வது இதற்கு தானா..? வருமான வரியில் இருந்து தப்பிக்க மாஸ்டர் பிளான்..!!