For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாரடைப்பு வராமல் தடுக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

05:30 AM May 24, 2024 IST | Baskar
மாரடைப்பு வராமல் தடுக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க
Advertisement

இதய நோய்கள் வராமல் தடுக்க இந்த 7 விஷயங்களை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

Advertisement

குறிப்பாக வாழ்க்கை முறை மாற்றங்களால் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் இதய நோய்களாக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.காலையில் எழுந்ததும் தினமும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேணடியது மிக மிக முக்கியம்.தினசரி வழக்கமாக உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
மேலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கு இது மிகப்பெரிய அளவில் உடற்பயிற்சிகள் உதவி செய்யும். குறிப்பாக கார்டியோ மற்றும் ஸ்டிரென்த் டிரெயினிங் மிக அவசியம்.

வளர்சிதை மாற்றக் கோளாறுகளும் இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தவறான, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் தான் காரணமாக இருக்கிறது. அதிகமாக பதப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஜங்க் உணவுகள், ஊட்டச்சத்துக்கள் குறைபாடு (மினரல்கள் குறைபாடு) உள்ளிட்டவற்றால் ரத்த அழுத்தத்திலும் ரத்த சர்க்கரை அளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு இதய நோய் ஆபத்துகளை ஏற்படுத்தும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மிக அவசியம். குறிப்பாக எல்லாவித வைட்டமின்களும் மினரல்களும் உள்ளடங்கிய சமச்சீர் உணவாக இருப்பது மிகவும் நல்லது.

மன அழுத்தத்துக்கும் இதய நோய்களுக்கும் மிக அதிகமான தொடர்பு உண்டு. மன அழுத்தம் அதிகமாகும் போது உடலில் ரத்த அழுத்தத்தின் அளவில் நிறைய மாறுதல்கள் உண்டாகும். நாள்பட்ட மன அழுத்தம் இருக்கும்போது அது இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும். அதனால் மன அழுத்தத்தைக் குறைப்பது மிக அவசியம். அதை கட்டுப்படுத்த யோகா, தியானம் போன்றவற்றை செய்யுங்கள்.

40 வயதைக் கடந்ததுமே குறைந்தது 6 மாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

குறிப்பாக ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய், இதய நோய் ஆபத்துகள் 40 வயதுக்கு மேல் அதிகரிக்கும். இதை கட்டுப்படுத்த உடல் பரிசோதனைகள் மிக அவசியம்.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகிய இரண்டுமே இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடிய விஷயம்.

இந்த இரண்டு பழக்கங்கள் உங்களுககு இருந்தால் உடனடியாக இந்த பழக்கங்களைக் கைவிடுங்கள்.இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையுமே மேம்படுத்தும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்து பிஎம்ஐ அளவை சீராக வைத்திருப்பது உங்களை அழகாக வைத்திருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

உடல் பருமன் தான் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது. அதனால் உடல் பருமனைக் கட்டுக்குள் கொண்டு வந்து எடையைக் குறைப்பது மிக அவசியம்.

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் தூக்கம் மிக அவசியம். மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் இதய ஆரோக்கியம் வரை எல்லாவற்றுக்கும் தூக்க சுழற்சி சரியாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 மணி நேரம் நன்றாகத் தூங்க வேண்டும்.

Read More: படுத்துக் கொண்டே செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்..? பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்..!!

Advertisement